
India vs England 4th Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடாத நிலையில் அர்ஷ்தீப் சிங்கை லெவனில் சேர்க்க வேண்டும் என்று இந்திய வீரர் அஜிங்கியா ரஹானே அறிவுறுத்தியுள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது. இப்போட்டிகாக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இதில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. ஏனெனில் இத்தொடருக்கு முன்னதாக பும்ரா மூன்று டெஸ்டில் மட்டுமே விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது இந்த தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளார். இதனால் இத்தொடரின் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் எதில் பும்ரா விளையாடுவார் என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.