-mdl.jpg)
இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணியுடனான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. மேலும் இத்தொடருக்கான இந்திய அணியும் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இத்தொடருக்கு தயாராகும் வரையில் இந்திய அணியைச் சேர்ந்த நட்சத்திர வீரர்கள் அனைவரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளனர்.
இதில் அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்டோருக்கு மட்டும் பிசிசிஐ ஓய்வு வழங்கியுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் எம் எஸ் தோனி, விராட் கோலி ஆகியோருடன் தற்போதுள்ள் கேப்டன் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி பாணியை ஒப்பிட்டு பேசியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இந்த மூன்று கேப்டன்களின் கீழும் விளையாடியுள்ள அஷ்வின், ரோஹித்தின் தலைமைத்துவத்தை தனித்து நிற்கும் தனித்துவமான பண்புகளைப் பற்றி பேசியுள்ளார். இதுகுறித்து அஸ்வின் கூறுகையில், “ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் 2-3 விஷயங்கள் நன்றாக உள்ளன. அவர் எப்போதும் அணியின் சூழலை வெளிச்சமாக வைத்திருப்பார். அதை இலகுவாக வைத்திருக்க முயற்சி செய்கிறார். மேலும் அவர் மிகவும் சீரானவராகவும், திட்டங்களை வகுப்பதில் வலிமையானவராகவும் உள்ளார்.