எப்படி இருந்திருந்தாலும் இந்திய அணி இத்தொடரை வெல்லும் - ஹர்பஜன் சிங் கருத்து!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தத் தொடர் 10 போட்டிகளைக் கொண்டிருந்தாலும், 10 போட்டிகளையுமே இந்தியா வெல்லும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகளைக் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடந்துமுடிந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நில்யில்ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தத் தொடர் 10 போட்டிகளைக் கொண்டிருந்தாலும், 10 போட்டிகளையுமே இந்தியா வெல்லும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
Trending
இதுகுறித்து பேசிய அவர், “அஸ்வினின் பந்துவீச்சைச் சமாளிப்பதற்காக அவரைப் போன்று பந்துவீசக்கூடிய ஒருவரைத் தேடிப்பிடித்து, வலைப்பயிற்சியில் ஈடுபட்டது ஆஸ்திரேலியா. ஆனால், ஆஸ்திரேலிய அணியே ஒரு ’நகல்’ (டூப்ளிகேட்) என நான் நினைக்கிறேன். எதிர்மறையான விஷயங்களில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்தும் மனநிலையைக் கொண்டிருக்கின்றனர். மைதானம் பற்றியும், பந்துவீச்சாளர்கள் பற்றியும் நினைத்து நிறைய குழப்பமடைந்ததால், பந்துவீசுவதற்கு முன்னதாகவே அவர்கள் தோற்றுவிட்டனர்.
அவர்களின் ஆட்டத்தைப் பார்த்தால் போட்டிக்கு தயாராகி வந்ததுபோலவே தெரியவில்லை. விக்கெட்டை எப்படி இழப்பது என்பதற்கு பயிற்சி பெற்றதுபோலவே தெரிகிறது. இந்த தொடரில் இந்தியா 4-0 என்ற கணக்கில் வெற்றி பெறும். அதேநேரத்தில் இது, 10 போட்டிகள் கொண்ட தொடராக இருந்தாலும், இந்தியா 10-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தும். அந்த அளவிற்கு பலவீனமாக சிந்திக்கின்றனர். மைதானத்தில் பிரச்சினை இருந்தால் அதனை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். ஆனால் ஓய்வறையிலேயே சோர்ந்துவிடுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் குடும்ப காரணங்களால் சிட்னி சென்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாள்களில் இந்தியா திரும்புவார் என்றும், இந்தூரில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட்டில் பங்கேற்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும், பேட் கம்மின்ஸ் மீண்டும் வராத பட்சத்தில் மூன்றாவது டெஸ்டில் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் பேட் கம்மின்ஸ் நாடு திரும்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now