
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வந்த இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி, அதன்பின் விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. இதன்மூலம் இந்தியாவிற்கு எதிராக சொந்த மண்ணில் மீண்டும் ஆஸ்திரேலிய அணி இத்தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய விரர் ஷுப்மன் கில் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்படி காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாடாமல் இருந்த ஷுப்மன் கில் அடுத்தடுத்து போட்டிகளில் விளையாடினார். பின்னார் பாக்ஸிங் டேஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்தும் அவர் வெளியேற்றப்பட்டார்.
அதன்பிறகு, ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக சிட்னியில் நடந்த கடைசி டெஸ்டில் அவர் அணிக்குத் திரும்பினார். ஆனால் அந்தப் போட்டியிலும் அவரால் பேட்டிங்கில் ரன்களைச் சேர்க்க முடியவில்லை. இத்தொடரின் மொத்தமாக ஐந்து இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர் 18.60 சராசரியில் 93 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மேற்கொண்டு சமீப காலமாகவே ஷுப்மன் கில்லின் ஃபார்ம் குறித்த கேள்வியானது அதிகரித்து வந்த நிலையில், தற்போது இத்தொடரிலும் அவர் சோபிக்க தவறியுள்ளார்.