
விராட் கோலி திறமை வாய்ந்த வீரராக இருந்தாலும் தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் தான் அவர் மற்றவர்களை விட ஒரு படி மேல் இருக்கிறார். பேட்டிங் மட்டுமல்ல அணிக்கு தேவையான ஒவ்வொரு விஷயத்திலும் விராட் கோலி கடும் கவனத்துடன் பயிற்சி செய்வார்.இதனை தனது புத்தகத்தில் முன்னாள் பில்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதில், “நாங்கள் மார்ச் மாதம் 2021 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட இருந்தோம். உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இது பகல் இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற்றது. நாங்கள் அப்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை. எனவே இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருந்தோம்.
பிங்க் நிற பந்து பயன்படுத்தப்படும் என்பதால் மைதானத்தில் காவிநிற இருக்கைகள் அமைக்கப்பட்டதால் பந்தை எங்களால் காண முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. காரணம் அப்போது கரோனா நேரம் என்பதால் பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. இதனால் காவிநிற இருக்கைகள் மட்டும்தான் நாங்கள் கேட்ச் பிடிக்கும்போது தெரியுமே, தவிர பிங்க் நிற பந்தை கண்டுபிடிக்க முடியாது என்று நாங்கள் பேசிக் கொண்டோம்.