உலகில் எங்கு விளையாடினாலும் பும்ராவால் இதனை செய்ய முடியும் - ரோஹித் சர்மா!
பும்ரா எங்களுக்காக என்ன செய்ய முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். அவரை நாம் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவது முக்கியம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 53 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 32 ரன்களையும் சேர்த்தனர். ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரஷித் கான் மற்றும் ஃபசல்ஹக் ஃபரூக்கி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய ஆஃப்கானிஸ்தான் அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Trending
அந்த அணியில் அதிகபட்சமாகவே அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 26 ரன்களையும், நஜிபுல்ல ஸத்ரான் 19 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன்மூலம் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது. மேலும் இப்போட்டியில் அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் பும்ரா எங்களுக்காக என்ன செய்ய முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். அவரை நாம் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவது முக்கியம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா, “கடந்த இரண்டு ஆண்டுகளாக, நாங்கள் இங்கு வந்து சில டி20 போட்டிகளில் விளையாடியுள்ளோம். அதனால் இப்போட்டிக்கான நாங்கள் கொஞ்சம் நன்றாக திட்டமிட்டோம். மேலும் எங்களுக்கு ஏற்ப நாங்கள் திட்டங்களை வகுத்ததுடன், அவை அனைத்தும் எங்களுக்கு நன்கு பொருந்தினோம். எங்கள் பந்துவீச்சு வரிசையைக் கொண்டு எங்களால் எந்த ஒரு இலக்கையும் பாதுகாக்க முடியும் என்று எங்களுக்குத் தெரியும்.
எங்கள் பந்துவீச்சாளர்கள் அனைவரும் தங்கள் வேலையை சரியா செய்து வருகிறார். மேலும் இன்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரது பார்ட்னர்ஷிப் சிறப்பாக இருந்தது. மேலும் பும்ரா எங்களுக்காக என்ன செய்ய முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். அவரை நாம் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவது முக்கியம். அவருக்கான சரியான வாய்ப்பை கொடுத்தால் பொறுப்பையும் ஏற்கத் தயாராக இருப்பவர்.
அவர் உலகில் எங்கு விளையாடினாலும் அணியின் பொறுப்பை ஏற்க தயாராக இருக்கிறார். நான் நிலைமைகளை மதிப்பிட வேண்டும். எதிரணியைப் பார்த்து எந்த மாற்றத்தையும் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். இப்போட்டியில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்துவது நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். நாங்கனை நினைத்தைப் போலவே நடந்தது. தேவைப்பட்டால் முன்னோக்கி செல்ல, நான் மூன்று சீமர்களை விளையாட தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now