
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தாயார் உடல் குறைவு காரணமாக இன்று காலமானார். இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஆஸி., வீரர்கள் இன்றைய ஆட்டத்தில் கையில் கருப்பு பேண்ட் அணிந்து விளையாடுவார்கள் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாட் கம்மின்ஸ் தாயார் மரியா கம்மின்ஸ், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து, பாட் கம்மின்ஸ் டெல்லி டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஆஸ்திரேலியா சென்றார். அதன் பிறகு அவர் தனது தாயாருடன் நேரத்தை செலவழித்தார். இந்நிலையில், மரியா கம்மின்ஸ் இன்று காலமானார்.
இதுகுறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "பாட் கம்மின்ஸ் தாயார் மரியா கம்மின்ஸ் காலமானதை அறிந்து மிகுந்த கவலை அடைந்தோம். பாட் கம்மின்ஸுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.