Advertisement
Advertisement
Advertisement

IND vs AUS: விமர்சனங்களுக்கு பதிலடிக்கொடுத்த பாட் கம்மின்ஸ்!

நாங்கள் சுற்றுப் பயணம் செய்வதையும் ஒருவரோடு ஒருவர் விளையாடுவதையும் வேடிக்கையான ஒன்றாக விரும்புகிறோம் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement
IND V AUS: Pat Cummins Admits Playing Three Spinners In New Delhi Is In The Conversation
IND V AUS: Pat Cummins Admits Playing Three Spinners In New Delhi Is In The Conversation (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 16, 2023 • 10:00 PM

உலக கிரிக்கெட்டில் இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கோப்பை டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பே ஏகப்பட்ட அளவில் எதிர்பார்ப்புகள் கிளம்பி இருந்தது. ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் ஆஸ்திரேலியா ஊடகங்களின் இந்திய ஆடுகளம் குறித்த குற்றச்சாட்டுகள், இந்தியா வந்த ஆஸ்திரேலியா அணி பயிற்சி ஆட்டத்தை மறுத்தது, மேலும் அஸ்வின் போல பந்து வீசும் பாணியை கொண்டுள்ள இந்திய இளம் வீரரை வைத்து பயிற்சி மேற்கொண்டது என எல்லாம் சேர்த்து இந்த தொடருக்கு மிகப்பெரிய அனலை கூட்டி இருந்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
February 16, 2023 • 10:00 PM

இப்படியான நிலையில் நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி எந்தவித சண்டையையும் செய்யாமல் சரணடைந்து தோற்றது. இது மிகப்பெரிய ஆச்சரியத்தையும், ஆஸ்திரேலியா தரப்பில் மிகப்பெரிய விமர்சனங்களையும் உருவாக்கியது. ஆலன் பார்டர் கடுமையான விமர்சனங்களை ஸ்மித் மீது வைத்தார். இன்னொரு புறம் இயான் சேப்பலும் தாக்கினார். வாக் சகோதரர்கள் ஒருபுறம் ஆஸ்திரேலியா அணி தேர்வை விமர்சித்தார்கள். இன்று ரவி சாஸ்திரி ஆஸ்திரேலியா அணி தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை ஆட வேண்டும் என்று கேட்டுள்ளார்.

Trending

இதற்கெல்லாம் பதிலடி தரும் விதமாக பேசியுள்ள ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ், இது கிரிக்கெட். இது ஒரு விளையாட்டு. நாம் அனைவரும் வேடிக்கையாக இருந்து இதை அணுகி விளையாடும்போது சிறந்தவர்களாக இருக்கிறோம். நாங்கள் சுற்றுப் பயணம் செய்வதையும் ஒருவரோடு ஒருவர் விளையாடுவதையும் வேடிக்கையான ஒன்றாக விரும்புகிறோம். நீங்கள் 15 ஆட்டங்களை சிரித்து வெல்வீர்கள். அதே முறையில் ஒரு ஆட்டத்தை தோற்பீர்கள். உடனே மக்கள் நீங்கள் கோபமாக களத்தில் செயல்பட வேண்டும் என்று சொல்கிறார்கள். நான் இதையெல்லாம் உள்வாங்கவில்லை.
 
ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் வலது கை வீரர் என்பதால் அவரைக் கொண்டு ஆடுவது நல்லது. அவர் எங்களுக்கு ஐந்தாவது பந்துவீச்சு விருப்பத்தையும் தருகிறார். அவர் பெரிய வீரர். அவர் அணிக்குள் வரும்பொழுது எங்களது பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டு துறைகளும் பலமடையும். அவர் ஒரு காயத்தில் இருந்து கடினமான முறையில் மீண்டு வருகிறார். அவருக்கு பயிற்சி செய்ய இரண்டு அமர்வுகள் மட்டுமே கிடைத்தது. அதில் அவர் சிறப்பாகவே செயல்பட்டார். ஆனால் நாங்கள் மேலும் தொடர்ந்து அவர் எப்படி இருக்கிறார் என்று பார்ப்போம்” என்று கூறியுள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement