அணியின் சமநிலை சிறப்பாக உள்ளது - மிட்செல் மார்ஷ்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், அணியின் சமநிலை சிறப்பாக உள்ளது என ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மும்பையில் இன்று நடைபெறுகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக வார்னர், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல் உள்ளிட்ட வீரர்கள் இந்தியாவுக்கு வந்திருக்கிறார்கள். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த ஆஸ்திரேலியா அணி ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் எங்கள் அணியின் சமநிலை சிறப்பாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “அணியின் சமநிலை சிறப்பாக உள்ளது. காரணம் பல ஆல்ரவுண்டர்கள் தற்போது அணியில் இருக்கிறார்கள். பல சிறப்பான அணிகளும் கடந்த காலங்களில் பேட்டிங் வரிசையை பலப்படுத்தி இருக்கிறது. இங்கிலாந்து போன்ற அணியில் எட்டாவது இடத்தில் இருக்கும் வீரர் கூட அதிரடியாக விளையாடுவார். இதுபோன்று பல பேட்ஸ்மேன்கள் இருப்பது பெரிய இலக்கை துரத்த ஏதுவாக இருக்கும்.
Trending
இந்தத் தொடரில் பல பெரிய இலக்குகள் நிர்ணயிக்கப்படும் என நான் நம்புகிறேன். அதிக ரன்கள் இந்த தொடரில் அடிக்கப்படலாம். இந்தியாவில் விளையாடப்படும் கிரிக்கெட் எல்லாம் அதிக ரன்கள் அடிக்கிறார்கள், இல்லை வெற்றிகரமாக துரத்துகிறார்கள். உலக கோப்பை வேறு இங்குதான் நடைபெறுகிறது.
இதனால் இந்த தொடரை மிகவும் எதிர்பார்த்து இருக்கிறோம். இந்தத் தொடர் எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். எங்களுடைய முழு கவனமெல்லாம் இந்த தொடரை எப்படி வெல்வது என்பதில் தான் இருக்கிறது. உலக கோப்பைக்கு ஆறு மாதங்கள் தான் இருப்பதால் அதற்கான அணியை கட்டமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த தொடரில் சில சோதனை முயற்சிகளை மேற்கொள்ள உள்ளோம். எங்கள் அணி வீரர்கள் பலருக்கு இந்தியாவில் விளையாட அனுபவம் இருக்கிறது. அது நிச்சயம் கை கொடுக்கும். இந்தியாவில் எப்போதுமே ஒரு நாள் போட்டிகளில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதுவும் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகவும் கடினம். அவர்கள் தொடர்ந்து நன்றாக விளையாடி வருகிறார்கள். எனினும் எங்களது அணியினும் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். இதனால் இந்த தொடர் நிச்சயமாக கடும் சவால்கள் கொடுக்கும். தற்போது தான் அறுவை சிகிச்சை மேற்கொண்டு கிரிக்கெட் விளையாட திரும்பிருக்கிறேன்.
நான் இந்த தொடரில் வெறும் பந்துவீச்சாளராக தான் செயல்படுவேன். ஐபிஎல் தொடரில் பந்து வீச முடிவு எடுத்து இருக்கிறேன். ஸ்மித் எங்களிடம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அடிக்கடி கூறி வருகிறார். ஆனால் அது உண்மை கிடையாது. அவர் இன்னும் பல ஆண்டு காலம் விளையாடுவார்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now