
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகிறது . இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்து ஆஸ்திரேலியா அணியை முதலில் பேட்டிங் செய்ய கேட்டுக் கொண்டது .
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் முகமது சிராஜ் பந்துவீச்சில் கிளீன் போல்டாகி பெவிலியனுக்கு திரும்பினா. இதன் பிறகு மிச்சல் மார்ஷுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்மித் அணியின் ஸ்கோர் உயர சிறப்பாக ஆடினார் .
ஒரு முனையில் மிச்சல் மார்ஷ் அதிரடியாக ஆட மறுமுனையில் ஸ்டீவன் ஸ்மித் நிதானமாக அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதனால் ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இந்திய அணியினருக்கு வாய்ப்பு கொடுக்காமல் சிறப்பாக விளையாடியது இந்த ஜோடி.