IND vs AUS, 3rd ODI: ஆஸியை 269 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 270 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதன்பின், விசாகப்பட்டினத்தில் நடந்த 2ஆவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
Trending
வார்னர் அணிக்கு திரும்பியும், அவரை நடுவரிசையில் கேப்டன் ஸ்மித் களமிறக்கினார். இதனால் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ் - டிராவிஸ் ஹெட் இணை களமிறங்கினர். ஆனால் முதலில் பொறுமை காத்த மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஜோடி, பிறகு அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர் இவர்களை கட்டுப்படுத்த இந்திய வேகப்பந்துவீச்சாளர்களால் முடியவில்லை. இதனால், இன்று இலக்கு 350க்கு மேல் போய்விடும் என்ற பயம் இந்திய ரசிகர்களுக்கு இருந்தது.
ஆனால் பின் 33 ரன்களைச் சேர்த்திருந்த டிராவிஸ் ஹெட் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் ரன் ஏதுமின்றி ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மிட்செல் மார்ஷும் 47 ரன்களுக்கு ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அதன்பின் களமிறங்கிய டேவிட் வார்னர் 23, மார்னஸ் லபுசாக்னே 28, அலெக்ஸ் கேரி 38, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 25, சீன் அபெட் 26, மிட்செல் ஸ்டார்க் 17 ரன்கல் என அடுத்தடுத்து ஓரளவு ரன்களை மட்டுமே எடுத்தனர். இதனால் 49 ஓவர்க்ளில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
Win Big, Make Your Cricket Tales Now