
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர்க் - கவாஸ்கா் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இரு அணிகலுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் இந்தூரில் நடைபெற்றது.
அதன்படி ப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மேத்யூ குன்னமேன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 197 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 88 ரன்கள் முன்னிலை பெற்றது. உஸ்மான் கவாஜா அதிகபட்சமாக 60 ரன்களையும், மாா்னஸ் லபுஸ்சேன் 31 ரன்களையும் எடுத்தனா்.இந்திய தரப்பில் அற்புதமாக பந்துவீசிய ஸ்பின்னா்கள் ரவீந்திர ஜடேஜா 4-76, அஸ்வின் ரவிச்சந்திரன் 3-44, உமேஷ் யாதவ் 3-12 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.