
வரும் பிப்ரவரி மாதம் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி குறைந்தபட்சம் 3 டெஸ்ட் போட்டிகளில் வென்றால் மட்டுமே இந்திய அணி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். புதிய தேர்வுக்குழு தேர்வு செய்த அணியை தற்போது காணலாம்.
வங்கதேச டெஸ்ட் தொடரில் இடம்பெறாத ரோகித் சர்மா மீண்டும் கேப்டனாக அணிக்கு திரும்பியுள்ளார். இதே போன்று அணியின் துணை கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் தொடக்க வீரராக சுப்மான் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அனுபவ வீரர் புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் நடுவரிசை வீரராக அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் கார் விபத்தில் காயமடைந்த நிலையில் அவருக்கு மாற்றாக இஷான் கிஷனும், கேஎஸ் பரத்தும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதே போன்று காயத்திலிருந்து குணமடைந்துள்ள ஜடேஜா அணிக்கு திரும்பியுள்ளார். சுழற்பந்தவீச்சாளராக அஸ்வின், குல்தீப் யாதவ் அக்சர் பட்டேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.