
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது டெஸ்ட், டெல்லியில் நாளை மறுநாள் தொடங்குகிறது.
காயம் காரணமாக முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விளையாடவில்லை. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்டில் காயமடைந்ததால் இந்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் விளையாடுவாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய மிட்செல் ஸ்டார்க், “என்னுடைய பந்துவீச்சில், உடற்தகுதியில் இன்னும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. உடலில் இன்னும் வலு தேவைப்படுகிறது. மெல்ல மெல்ல முன்னேற்றம் கண்டு வருகிறேன். நான் நினைத்தது போல முன்னேற்றம் வேகமாக நடைபெறவில்லை. ஆனால் மருத்துவக் குழுவினர் திட்டமிட்டபடி முன்னேற்றம் கண்டு வருகிறேன்.