
பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் கடைசி மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது. இதுவரை நடந்த மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ள இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும்.
இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்தியாவின் பேட்டிங் சற்று சொதப்பலாக இருந்தது. 75 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்து ஒன்பது விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. எனவே இந்த முறை கம்பேக் கொடுத்தே தீர வேண்டும் என்ற கட்டாயம். இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதில், “இந்திய அணி இரண்டு தவறுகளை செய்து வருகிறது. ஸ்பின்னர்களுக்கு எதிராக இந்தியாவின் டாப் ஆர்டர் தடுமாறுகிறது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷுப்மான் கில் ஆகியோர் இன்னும் தெளிவாக ஆட வேண்டும். அப்போதுதான் பவுலர்களுக்கு உதவி கிடைக்கும். குறிப்பாக விராட் கோலி ஃபார்மை கொண்டு வந்தால் மட்டுமே இந்தியா வெற்றி பெற முடியும்.