IND vs NZ, 1st Test: நியூசிலாந்து அபார பந்துவீச்சு; திணறும் இந்திய அணி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நேற்று (அக்டோபர் 16) தொடங்கியது. அதன்படி இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக இப்போட்டியின் முதல்நாள் ஆட்டமானது முழுவதுமாக கைவிடப்பட்டது.
இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாஸ் நிகழ்வானது நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நியூசிலாந்து அணியை பந்துவீச அழைத்தார். இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கத்திலேயே நியூசிலாந்தின் பந்துவீச்சை கணிக்கமுடியாமல் ரன்களைச் சேர்க்க தடுமாறினர். அதன்பின் 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார்.
Trending
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர் விராட் கோலியும் ரன்கள் ஏதுமின்றி வில்லியம் ஓ ரூர்க்கின் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய சர்ஃப்ராஸ் கானும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, இந்திய அணி 10 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரிஷப் பந்த் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இதில் தொடர்ந்து நிதானமாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தனர். இதனால் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 34 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இதில் ரிஷப் பந்த் 15 ரன்களுடன் களத்தில் உள்ளார். நியூசிலாந்து அணி தரப்பில் வில்லியம் ஓ ரூர்க் 3 விக்கெட்டுகளையும், மேட் ஹென்றி 2 விக்கெட்டுகளையும், டிம் சௌதீ ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.
இந்தியா பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
Also Read: Funding To Save Test Cricket
நியூசிலாந்து பிளேயிங் லெவன்: டாம் லாதம்(கே), டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் பிளென்டெல், கிளென் பிலிப்ஸ்,மேட் ஹென்றி, டிம் சௌதீ, அஜாஸ் படேல், வில்லியம் ஓ ரூர்க்.
Win Big, Make Your Cricket Tales Now