IND vs NZ, 3rd Test: வாஷிங்டன் அசத்தல் பந்துவீச்சு; நியூசிலாந்து அணி தடுமாற்றம்!
இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்களைச் சேர்த்துள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (நவம்பர் 1) மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தார்.
இன்றைய போட்டிக்கான நியூசிலாந்து அணியில் மிட்செல் சான்ட்னர், டிம் சௌதீ நீக்கப்பட்டு இஷ் சோதி மற்றும் மேட் ஹென்றி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேசமயம் இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா நீக்கப்பட்டு முகமது சிராஜ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கேப்டன் டாம் லேதம் மற்றும் டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர்.
Trending
இப்போட்டியில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவான் கான்வே 4 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆகாஷ் தீப் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் டாம் லேதமுடன் இணைந்த வில் யங் பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாசி ஸ்கோரையும் உயர்த்தினார். இதன்மூலம் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 44 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் டாம் லேதம் 28 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரச்சின் ரவீந்திராவும் 5 ரன்கள் மட்டுமே எடுத்த கையோடு அடுத்தடுத்து வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் நியூசிலாந்து அணி 72 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் இணைந்துள்ள வில் யங் - டேரில் மிட்செல் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து வருகின்றனர். இதன்மூலம் முதல்நாள் உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் வில் யங் 38 ரன்களுடனும், டேவில் மிட்செல் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
நியூசிலாந்து பிளேயிங் லெவன்: டாம் லாதம் (கே), டெவான் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் ப்ளூன்டெல், கிளென் பிலிப்ஸ், இஷ் சோதி, மாட் ஹென்றி, அஜாஸ் பட்டேல், வில்லியம் ஓரூர்கே
Also Read: Funding To Save Test Cricket
இந்தியா பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா (கே), ஷுப்மான் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், சர்ஃப்ராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ரவிச்சந்திரன் அஸ்வின், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.
Win Big, Make Your Cricket Tales Now