
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது.
இந்த போட்டியியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களிலேயே ஆல் அவுட்டாக, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்களைக் குவித்தது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 462 ரன்களை குவித்த நிலையிலும், நியூசிலாந்துக்கு 107 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயிக்க முடிந்தது. பின்னர் நியூசிலாந்து அணியானது எளிதாக இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
மேற்கொண்டு இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணியானது 36 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் இந்திய அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியையும் வென்றுள்ளதுடன், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆராம்பத்திலேயே முன்னிலையும் வகித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் அக்டோபர் 24ஆம் தேதி நடைபெறவுள்ளது.
Washington Sundar is back in India's Test Squad! pic.twitter.com/Fwabza93mu
— CRICKETNMORE (@cricketnmore) October 20, 2024