இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வெல்லுமா இந்தியா?
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை பர்மிங்ஹாமில் நடைபெறுகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி சமன் செய்த நிலையில், தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது டி20 ஆட்டம் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இங்கிலாந்துக்கு கருதப்படுகிறது. இதனையடுத்து, இந்திய அணிக்கு விராட் கோலி, ரிஷப் பந்த், பும்ரா ஆகியோர் திரும்பியுள்ளதால் பிளேயிங் லெவனில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
Trending
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், பிளேயிங் லெவனில் திரும்பியுள்ளதால், தொடக்க வீரர் இஷான் கிஷன் வெளியே செல்ல அதிக வாய்ப்புள்ளது. நம்பர் 3 வது வீரராக விராட் கோலி திரும்பியுள்ளதால், அந்த இடத்தில் சிறப்பாக விளையாடி சதம் விளாசிய தீபக் ஹூடாவை ஓபனிங்கில் களமிறக்கவும் அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நடுவரிசையில் சூர்யகுமார் குமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் ஆகியோர் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று ஜடேஜாவும் பிளேயிங் லெவனில் திரும்பியுள்ளதால், அக்சர் பட்டேலுக்கு வாய்ப்பு மறுக்கப்படலாம். நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைப்பது சந்தேகமே.
இதே போன்று சாஹல் பிளேயிங் லெவனில் முக்கியம் என்பதால் 2 வேகபந்துவீச்சாளருக்கு மட்டுமே இடம் கிடைக்கும். அதில் ஒன்று புவனேஸ்வர்குமார் தனது இடத்தை உறுதி செய்துவிட்டார். இதனால் எஞ்சியுள்ள 1 இடத்தில் ஹர்சல் பட்டேலா, பும்ராவா என்ற குழப்பம் ஏற்பட, நிச்சயம் பும்ராவுக்கு தான் வாய்ப்பு வழங்கப்படும்.
Win Big, Make Your Cricket Tales Now