
India Clinches Their 21st T20I Win In A Calendar Year & Breaks Pakistan's Record (Image Source: Google)
டி20 உலக கோப்பைக்காக தயாராகிவரும் இந்திய அணி, ஆசிய கோப்பையில் தோல்வியடைந்திருந்தாலும், ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் சிறப்பாக விளையாடி வெற்றிகளை குவித்துவருகிறது.
நேற்று ஹைதராபாத்தில் நடந்த கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 186 ரன்களை குவிக்க, சூர்யகுமார் யாதவ் மற்றும் விராட் கோலியின் அரைசதங்களால் கடைசி ஓவரில் இலக்கை அடித்து இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் பெற்ற வெற்றி, 2022ஆம் ஆண்டில் இந்திய அணியின் 21ஆவது வெற்றி ஆகும். இந்த ஆண்டில் விளையாடிய 28 போட்டிகளில் 21 வெற்றிகளை இந்தியா பெற்றுள்ளது. இதன்மூலம் ஒரு ஆண்டில் அதிக டி20 வெற்றிகளை பெற்ற அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.