
India coach Rahul dravid spl training to virat kohli for t20 series (Image Source: Google)
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் களமிறங்கம் இந்திய அணி வீரர்கள் இன்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்சையும் சேர்த்து 31 ரன்கள் மட்டுமே அடித்த விராட் கோலி மீது கிரிக்கெட் விமர்சகர்கள் கடும் விமர்சனங்களை முன் வைக்கின்றனர். டி20 அணியில் உள்ள இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடுவதால் விராட் கோலியின் இடம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த நிலையில், பர்மிங்க்ஹாமில் நடைபெற்ற பயிற்சி முகாமில் விராட் கோலிக்கு தனியாக ஸ்பெஷல் கிளாஸ் எடுத்தார் டிராவிட். விராட் கோலியின் பேட்டிங்கை கவனித்த டிராவிட், சில அறிவுரைகளை கூறினார். அப்போது விராட் கோலி பார்ம்க்கு திரும்புவது அணிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை டிராவிட் கூறியுள்ளார்.