Advertisement
Advertisement
Advertisement

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; துணைக்கேப்டனாக பும்ரா நியமனம்!

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

Advertisement
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; துணைக்கேப்டனாக பும்ரா நியமனம்!
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; துணைக்கேப்டனாக பும்ரா நியமனம்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 11, 2024 • 10:59 PM

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் வங்கதேசத்தை வைட் வாஷ் செய்து தொடரை வென்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 11, 2024 • 10:59 PM

இதனைத்தொடர்ந்து இந்திய அணி இம்மாதம் நியூசிலாந்து அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிவிளையாடவுள்ளது. அதன்படி இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது அக்டோபர் 16ஆம் தேதி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவுள்ளது. மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்கும் டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. 

Trending

இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்தியா அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. அதன்படி ரோஹித் சர்மா தலைமையிலான இந்த இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் வங்கதேச டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த யாஷ் தயாளிற்கு இந்த அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இதுதவிர வங்கதேச டெஸ்ட் தொடரில் விளையாடிய மற்ற அனைத்து வீரர்கள் தங்கள் இடங்களை தக்கவைத்துள்ளனர். இதில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, கேஎல் ராகுல் உள்ளிட்ட அனுபவ வீரர்களுடன், துரூவ் ஜூரெல், சர்ஃப்ராஸ் கான், ஆகாஷ் தீப் ஆகியோரும் இத்தொடருக்கான இந்திய அணி தங்கள் இடங்களை தக்கவைத்துள்ளனர். இதனால் நியூசிலாந்து தொடரில் இந்திய அணியின் செயல்பாடுகள் எவ்வாறும் இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

 

இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கே), ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்ஃப்ராஸ் கான், ரிஷப் பந்த், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் , முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.

Also Read: Funding To Save Test Cricket

நியூசிலாந்து டெஸ்ட் அணி: டாம் லாதம் (கேப்டன்), டாம் பிளன்டெல், மைக்கேல் பிரேஸ்வெல் (முதல் டெஸ்ட் மட்டும்), மார்க் சாப்மேன், டெவான் கான்வே, மேட் ஹென்றி, டேரில் மிட்செல், வில் ஓ'ரூர்க், அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், பென் சியர்ஸ், இஷ் சோதி (இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் மட்டும்), டிம் சௌதீ, கேன் வில்லியம்சன், வில் யங்

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement