Advertisement

அவரது ஒர்த் இந்திய அணிக்கு தெரியவில்லை என நினைக்கிறேன் - இயான் சேப்பல்!

இந்த டெஸ்ட் தொடருக்கு ஹார்திக் பாண்டியாவை ஏன் தேர்வு செய்யவில்லை எனத் தெரியவில்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் இயான் செப்பல் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan March 04, 2023 • 12:14 PM
 India needs Hardik Pandya, why doesn't he play Tests?: Chappell
India needs Hardik Pandya, why doesn't he play Tests?: Chappell (Image Source: Google)
Advertisement

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை மூன்று நாட்களுக்குள் வீ்ழ்த்தி அபார வெற்றியைப் பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இதனைத் தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் துவங்கி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி ஸ்பின்னர்கள் ஓரளவுக்குத்தான் சிறப்பாக பந்துவீசினார்கள். ஆனால், பேட்டர்களில் புஜாராவைத் தவிர யாருமே சிறப்பாக செயல்படவில்லை. படுமோசமாக செயல்பட்டதால், இந்திய அணி இரண்டு இன்னிங்ஸ்களிலும் 109, 163 என மட்டமான ரன்களை மட்டும்தான் அடித்தது. இறுதியில் இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

Trending


இதனைத் தொடர்ந்து, இப்போட்டியில் இந்திய அணி தோற்றதற்கு காரணம் என்ன என்பது குறித்து பல கிரிக்கெட் ஆளுமைகள் பேசி வருகிறார்கள். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணி முன்னாள் வீரர் இயான் சேப்பலும், இந்திய அணி தோற்க காரணம் என்ன என்பது குறித்துப் பேசியுள்ளார்.

அதில், “இந்த டெஸ்ட் தொடருக்கு ஹார்திக் பாண்டியாவை ஏன் தேர்வு செய்யவில்லை எனத் தெரியவில்லை. அவரால் அதிக ஓவர்களை வீச முடியாது என பலர் பேசி வருகிறார்கள். அவரால், அதிக ஓவர்களை வீச முடியுமா, முடியாதா என்பது குறித்து கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து கூற தேவையில்லை. மருத்துவர்கள்தான் கருத்து கூற வேண்டும்.

ஹார்திக் பாண்டியா திறமையான பேட்ஸ்மேன். அவரது பந்துவீச்சு, பீல்டிங் ஆகியவற்றையும் யாரும் குறைசொல்ல முடியாது. ஹார்திக் பாண்டியாவை அணியில் சேர்த்திருந்தால், ஆஸ்திரேலிய அணிக்கு கேமரூன் கிரீன் எப்படி வலுசேர்த்தாரோ, அதேபோல இந்திய அணிக்கு ஹார்திக் பாண்டியா பலம் சேர்ந்திருப்பார். அவரது ஒர்த் இந்திய அணிக்கு தெரியவில்லை என நினைக்கிறேன். அவரை பரிசோதித்து, உடனே அணியில் சேர்க்க வேண்டும்” எனக் கூறினார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement