ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளைடும் இந்திய அணியின் உத்தேச லெவன்!
ஜிம்பாப்வே மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி ஜூலை 06ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி வரும் ஜூலை 06ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரின் அனைத்து போட்டிகளும் ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் ஷுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணியானது சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வந்த அபிஷேக் சர்மா, ரியான் பராக், துருவ் ஜூரெல், துஷார் தேஷ்பாண்டே உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், அவர்கள் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Trending
அதேசமயம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் தூபே ஆகியோருக்கும் இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடும் புயல் காரணமாக சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிவம் தூபே ஆகியோர் விண்டீஸில் இருந்து இந்தியா திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக முதலிரண்டு டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் சாய் சுதர்ஷன், ஹர்ஷித் ரானா மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது ஜூலை 06ஆம் தேதி ஹராரேவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
அதன்படி, அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஷுப்மன் கில்லுடன் ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடிய அறிமுக வீரர் அபிஷேக் சர்மா களமிறங்க அதிகபடியான வாய்ப்புகள் உள்ளது. மேற்கொண்டு மூன்றாம் இடத்தில் ருதுராஜ் கெய்க்வாட்டும், நான்காம் இடத்தில் மற்றொரு அறிமுக வீரரான ரியான் பராக்கும் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்தாம் வரிசையைப் பொறுத்தவரையில் ரிங்கு சிங் அந்த இடத்தைப் பிடிப்பார்.
The Five Match T20 Series between India and Zimbabwe starts from July 6th! #CricketTwitter #INDvZIM #ShubmanGill #TeamIndia pic.twitter.com/ab5I6Nzg7I
— CRICKETNMORE (@cricketnmore) July 3, 2024
மேற்கொண்டு அணியின் விக்கெட் கீப்பருக்கான வாய்ப்பானது அறிமுக வீரர் துருவ் ஜுரெலுக்கு வழங்கப்படும். மேற்கொண்டு சுழற்பந்து வீச்சாளர்களாக வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய் ஆகியோர் இடம்பிடிக்க்கும் பட்சத்தில், அணியின் வேகப்பந்து வீச்சாளர்களாக முகேஷ் குமார், கலீத் அஹ்மத் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோரு இடம்பிடிப்பதற்கே அதிகபடியான வாய்ப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இந்திய அணியின் உத்தேச லெவன்: அபிஷேக் சர்மா, ஷுப்மன் கில் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ரியான் பராக், ரிங்கு சிங், துருவ் ஜுரெல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், முகேஷ் குமார், ஆவேஷ் கான், கலீல் அஹ்மத்.
Win Big, Make Your Cricket Tales Now