
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 518 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 175 ரன்களையும், ஆட்டமிழக்காமல் இருந்த ஷுப்மன் கில் 129 ரன்களையும், சாய் சுதர்ஷன் 87 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜோமல் வாரிக்கன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் ஜான் காம்பெல் 10 ரன்னிலும், டெகநரைன் சந்தர்பால் 34 ரன்னிலும், அலிக் அதனாஸ் 41 ரன்னிலும், ஷாய் ஹோப் 36 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய விரர்களில் டெவின் இமளாக் 21 ரன்களையும், ஜஸ்டின் க்ரீவ்ஸ் 17 ரன்னிலும், காரி பியர் 23 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆண்டர்சன் பிலிப் 24 ரன்களையும் சேர்த்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 248 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 270 ரன்கள் பின் தங்கியதன் காரணமாக, ஃபாலோ ஆன் ஆனது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜான் காம்பெல் மற்றும் ஷாய் ஹோப் இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சாதங்களை விளாசியதுடன், அணியை முன்னிலை நோக்கியும் அழைத்து சென்றனர். இதில் ஜான் காம்பெல் 115 ரன்னிலும், ஷாய் ஹோப் 103 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த வீரர்களில் ஜஸ்டீன் க்ரீவ்ஸ் 50 ரன்களைச் சேர்த்தார்.