
India Test Schedule WTC 2025-27 Cycle: எதிர்வரும் 2025-27ஆம் ஆண்டு சுழற்சிக்கான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
நடந்து முடிந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. அதேசமயம் இந்த முறை இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற அதிக வாய்ப்புகள் இருந்த நிலையிலும் நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான தோல்வியின் காரணமாக அந்த வாய்ப்பை தவறவிட்டது.
இதனால் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் இந்திய அணியானது விளையாடவுள்ளது. அதிலும் குறிப்பாக ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்டோர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில், ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி எதிர்வரும் சவல்களை எவ்வாறு சமாளிக்கும் என்ற எதிர்பார்ப்புகளும், சந்தேகங்களும் அதிகரித்து வ்ருகின்றனர்.