கருண் நாயருக்கு பதில் சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் - தீப் தாஸ்குப்தா!
இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் எஞ்சிய இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பு தர வேண்டும் என முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா கூறியுள்ளார்

Manchester Test: இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் கருண் நாயருக்கு பதில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று முன்னாள் வீரர் தீப் தஸ்குப்தா தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், அதில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் தொடரைக் கைப்பற்றும், இந்திய அணி வெற்றிபெற்றால் தொடரை சமன்செய்யும் என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டிகாக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றன. மேற்கொண்டு இப்போட்டிக்கான இரு அணியின் பிளேயிங் லெவனும் என்னவாக இருக்கும் என்ற கேள்விகள் அதிகரித்து வருகின்றன.
அதிலும் குறிப்பாக இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்த கேள்விகள் அதிகரித்துள்ளது. ஏனெனில் கருண் நாயர், நிதிஷ் ரெட்டி உள்ளிட்டோர் கடந்த இரண்டு டெஸ்ட் போட்டியிலும் பெரிதளவில் சோபிக்க தவறியுள்ளனர். இதனால் அவர்கள் இடத்தில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் எஞ்சிய இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பு தர வேண்டும் என முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இந்திய அணியின் பிளேயிங் லெவனில், ஒன்றுக்கு மேற்பட்ட மாற்றங்கள் தேவையில்லை. என்னைப் பொறுத்தவரையில் ஒரே ஒரு மாற்றம் இருந்தால் போதும். அது கருண் நாயருக்குப் பதிலாக சாய் சுதர்சனை அணியில் சேர்க்க வேண்டும். ஏனெனில் கருண் நாயர் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் பெரிதளவில் ரன்கள் எடுக்கவில்லை. ஒவ்வோரு போட்டியிலும் அவருக்கு தொடக்கம் சிறப்பாக உள்ளது, ஆனால் அதனை பெரிய ஸ்கோராக மாற்றமுடியவில்லை.
மேலும் அவர் களத்திலும் அவ்வளவு சிறப்பாக தெரியவில்லை என்று நான் நம்புகிறேன். அதேசமயம் சாய் சுதர்சன் ஒரு இளம் வீரர். அதனால் இங்கிலாந்து தொடரில் காருண் நாயருக்கு பதிலாக இளம் வீரர் மீது நம்பிக்கை வைப்பது நல்லது” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் சாய் சுதர்ஷன் விளையாடிய நிலையில் அவரால் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: LIVE Cricket Score
இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.
Win Big, Make Your Cricket Tales Now