நான் இந்த போட்டியில் இன்னும் முடிந்தவரை விளையாடிருக்க வேண்டும் -ரோஹித் சர்மா!
இந்த போட்டியில் நாங்கள் விளையாடிய விதத்தை நினைத்து உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ராஜ்கோட் நகரில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்து இந்த தொடரில் ஆறுதல் வெற்றியை பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இந்து தொடரை கைப்பற்றியுள்ளது.
அதன்படி ராஜ்கோட் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியானது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 352 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக அதிக பட்சமாக மிட்சல் மார்ஷ் 96 ரன்களையும், ஸ்டீவன் ஸ்மித் 74 ரன்களையும் குவித்து அசத்தினர்.
Trending
அதன் பின்னர் 353 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 49.4 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 286 ரன்களை குவித்தது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, “இந்த போட்டியில் நாங்கள் விளையாடிய விதத்தை நினைத்து உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இந்த போட்டியில் இன்னும் முடிந்தவரை விளையாடிருக்க வேண்டும். ஆனாலும் நான் விளையாடிய வரை சிறப்பாக விளையாடியதாகவே உணர்கிறேன். கடந்த ஏழு, எட்டு ஒருநாள் போட்டிகளாக நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறோம்.
அதோடு சவாலான சூழ்நிலைகளிலும், பலமான அணிகளுக்கு எதிராகவும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு உள்ளோம். இதுபோன்ற சவால்களை எதிர்கொண்டு விளையாடும்போது சிறப்பாக இருக்கிறது. ஆனாலும் இன்றைய போட்டிக்கான ரிசல்ட் எங்கள் வசம் இல்லை. பும்ரா கடந்த சில போட்டிகளாகவே அற்புதமாக பந்து வீசி வருகிறார். அவருடைய திறன் இன்னும் கொஞ்சமும் மாறாமல் சிறப்பாக இருக்கிறது.
நிச்சயம் அவர் எங்களது அணியின் முக்கிய வீரராகவே இருக்கிறார். இதுவரை உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட அணியில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அதில் எந்த ஒரு குழப்பமும் கிடையாது. நிச்சயம் எங்கள் அணியால் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியும். எதிர்வரும் ஒன்றரை மாதங்கள் எங்களுக்கு மிக முக்கியமான ஒன்று” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now