ENG vs IND: இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கரோனா உறுதி!
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கரோனா உறுதியாகியுள்ளதால் இங்கிலாந்து தொடரில் பரபரப்பு உருவாகியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான பயிற்சி போட்டியில் இந்தியா மற்றும் கவுண்டி அணிகள் தீவிரமாக மோதி வருகிறது.
இந்நிலையில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கரோனா உறுதியாகியுள்ளது. பயிற்சி போட்டியில் பங்கேற்றிருந்த ரோஹித் சர்மா, 3ஆவது நாளான நேற்று பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் செய்ய களமிறங்கவே இல்லை. இந்திய அணி 364/7 ரன்களுக்கு சென்ற போதும், ரோஹித் வரவில்லை.
Trending
போட்டி முடிந்த பிறகு ரோஹித் சர்மாவுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்ட போது, அதில் பாசிட்டிவ் என முடிவு வந்துள்ளது. இதனையடுத்து அவர் குவாரண்டைன் செய்யப்பட்டுள்ளார். குறைந்தபட்சம் அடுத்த 5 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஜூலை 1 நடக்கவிருக்கும் டெஸ்ட் போட்டியையும் தவறவிடலாம்.
இந்திய அணியில் ஏற்கனவே கே.எல்.ராகுல் காயம் காரணமாக விலகிவிட்டார். தற்போது கேப்டன் ரோஹித் சர்மாவும் விலகுவது பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. இங்கிலாந்துடனான முந்தைய 4 போட்டிகளிலும் ரோஹித் சர்மா தான் இந்தியாவின் அதிக ரன் ஸ்கோரர். 4 போட்டிகளில் 368 ரன்களை அடித்தார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பயோ பபுள் விதிமுறைகள் பின்பற்றப்படாது என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ரோஹித் சர்மா, கோலி உள்ளிட்ட பல வீரர்களும் இங்கிலாந்து நகரங்களில் ஜாலியாக சுற்றி வந்தனர். எனவே இதுதான் ரோஹித்திற்கு தொற்று பரவ காரணமா என சந்தேகம் கிளம்பியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now