சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; சஞ்சு, சிராஜிக்கு இடமில்லை!
இங்கிலாந்து மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சஞ்சு சாம்சன், முகமது சிராஜ் உள்ளிட்டோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன.
இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. மேற்கொண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளைத் தவிர்த்து இத்தொடரில் பங்கேற்கும் மற்ற அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்திருந்தன.
Trending
இந்நிலையில் இங்கிலாந்து ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வுகுழு தலைவர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா இருவரும் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தனர். இதில் கேப்டனாக ரோஹித் சர்மா தொடரும் நிலையில், இந்திய ஒருநாள் அணியின் துணைக்கேப்டனாக ஷுப்மன் கில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
India's squad for the Champions Trophy is here!!#RohitSharma #ViratKohli #JaspritBumrah #India pic.twitter.com/biTc1QiN7F
— CRICKETNMORE (@cricketnmore) January 18, 2025
இதில் கயாம் காரணமாக அவதிப்பட்டு வரும் ஜஸ்பிரித் பும்ரா சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்து ஒருநாள் தொடரில் ஹர்ஷித் ரானா அணியில் இடம்பிடித்துள்ளார். மேற்கொண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன், வருண் சக்ரவர்த்தி, முகமது சிராஜ் மற்றும் கருண் நாயர் ஆகியோருக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
Shubman Gill will serve as Rohit Sharma's deputy in CT!#ChampionsTrophy2025 #TeamIndia #Cricket #India pic.twitter.com/lk9AyNOlYQ
— CRICKETNMORE (@cricketnmore) January 18, 2025
அதேசமயம் யஷஸ்வி ஜெய்ஸ்வால், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோருக்கு இந்திய ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து இந்திய ஒருநாள் அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் தேர்வுசெய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதல் விக்கெட் கீப்பர் இடம் ரிஷப் பந்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோரும் இந்த அணியில் தங்கள் இடங்களை உறுதிசெய்துள்ளனர்.
Also Read: Funding To Save Test Cricket
இங்கிலாந்து & சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹார்டிக் பாண்டியா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா (இங்கிலாந்து தொடரில் மட்டும்).
Win Big, Make Your Cricket Tales Now