
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணியை செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது ஐசிசி இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. உலகக் கோப்பை தொடருக்கான உத்தேச அணியை செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்றும், இறுதி 15 பேர் கொண்ட அணியை செப்டம்பர் 27ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என ஐசிசி கூறியுள்ளது.
இந்த நிலையில் இந்திய அணி 20 பேர் கொண்ட அணியை தயார் செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கேப்டன் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் தொடக்க வீரர்களாக அணியில் இருக்கிறார்கள். நடுவரிசையில் விராட் கோலி, காயத்தில் இருந்து மீண்டு வரும் ஸ்ரேயாஸ் ஐயர்,கே எல் ராகுல் ஆகியோர் உத்தேச அணையில் இடம்பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆல்ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, அக்சர் பட்டேல், சர்துல் தாக்கூர் அணியில் இடம் பெற்றிருக்கிறார்கள். வேகப்பந்து வீச்சாளராக ஷமி, சிராஜ், பும்ரா, உனாட்கட், முகேஷ் குமார் ஆகியோர் உத்தேச அணியில் இடம்பெற்றுள்ளனர்.சுழற் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் அணியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கூடுதல் விக்கெட் கீப்பர்களாக இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.