
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா இதையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வென்றுள்ள நிலையில், சொந்த மண்ணில் பதிலடி கொடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி தயாராகி வருகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கு பின் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் இந்திய அணி பங்கேற்க உள்ளது.
அதில் 2 டி20 போட்டிகள் அமெரிக்காவில் நடக்கவுள்ளது. இந்த தொடருக்கு பின் இந்திய அணி உடனடியாக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், இந்திய அணி, அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்கவுள்ளது.
இதன் மூலம் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மொத்தமாக 8 டி20 போட்டிகளில் இந்திய அணி களமிறங்க உள்ளது. அயர்லாந்து டி20 தொடரின் அனைத்து போட்டிகளும் டப்ளின் மைதானத்திலேயே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. முதல் டி20 போட்டி ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், 2ஆவது டி20 போட்டி ஆகஸ்ட் 20ஆம் தேதியும், மூன்றாவது டி20 போட்டி ஆகஸ்ட் 23ஆம் தேதியும் நடக்கவுள்ளது.