IND vs AFG: ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட், சஞ்சுவுக்கு இடம்!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி வரை மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியையே சந்திக்காமல் சென்ற இந்திய அணியானது நவம்பர் 19-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை தழுவி ஐசிசி கோப்பையை தவறவிட்டது. அதனை தொடர்ந்து அடுத்ததாக இந்திய அணி இந்த ஆண்டு நடைபெற ஜூன் மாதம் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு தற்போது அணி வீரர்களை தேர்வு செய்து வருகிறது.
அந்த வகையில் எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மட்டுமே இந்திய அணிக்காக அட்டவணையில் உள்ளது. இதன் காரணமாக இந்த ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் அணித்தேர்வு அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு கடந்த 2022-ஆம் ஆண்டிற்கு பிறகு சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடாமல் இருந்த ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் எதிர்வரும் டி20 உலக கோப்பையில் விளையாட விருப்பம் தெரிவித்திருந்தனர்.
Trending
இந்நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் காயம் காரணமாக ஹர்திக் பாண்டிய, சூர்யகுமார் யாதவ் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் அணியிலிருந்து விலகியுள்ளனர்.
இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், முகேஷ் குமார்.
Win Big, Make Your Cricket Tales Now