பயிற்சியைத் தொடங்கிய இந்திய அணி; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் இன்றைய தினம் தங்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர்.

ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. இத்தொடருக்காக ஷுப்மன் கில் தலைமையிலானான 18 பேர் அடங்கிய இந்திய அணியையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது.
முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில வெற்றிடங்கள் உருவாகியுள்ளன. மேலும் இங்கிலாந்து தொடரில் அந்த இடங்களை நிரப்பக்கூடிய வீரர்கள் யார் என்ற கேள்விகளும் அதிகரித்திருந்தது. அதற்கேற்றவகையில் சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர்த்து உள்ளூர் போட்டிகளில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கருண் நாயர் மற்றும் ஷர்தூல் தாக்கூர் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி நேற்றைய தினம் இங்கிலாந்து சென்றடைந்தது. இதில் அணியின் தலைமை பயிற்சியாளர், புதிய கேப்டன் ஷுப்மன் கில், அணியின் துணை கேப்டன் ரிஷப் பந்த் என ஒட்டுமொத்த அணியும் இங்கிலாந்து சென்றடைந்தனர்.
இந்நிலையில் எதிர்வரும் டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் இன்றைய தினம் தங்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர். இதுகுறித்த காணொளியை பிசிசிஐ தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேற்கொண்டு இந்திய அணி வீரர்கள் 13ஆம் தேதி இந்திய ஏ அணியுடன் பயிற்சி போட்டியில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
— BCCI (@BCCI) June 8, 2025
First sight of #TeamIndia getting into the groove in England #ENGvIND pic.twitter.com/TZdhAil9wV
தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20 ஆம் தேதி லீட்ஸ் மைதானத்திலும், 2ஆவது போட்டி ஜூலை 2ஆம் தேதி பர்மிங்ஹாமிலும், 3ஆவது போட்டி ஜூலை 10ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்திலும், 4ஆவது போட்டி மான்செஸ்டரிலும், 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 31ஆம் தேதி ஓவல் மைதானத்திலும் நடைபெறவுள்ளது.
Also Read: LIVE Cricket Score
இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணைக்கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.
Win Big, Make Your Cricket Tales Now