டெஸ்டில் அதிக சிக்ஸர்கள்; தோனியை பின்னுக்கு தள்ளிய ரோஹித் சர்மா!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை விளாசிய இரண்டாவது இந்திய வீரர் எனும் சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை தன் பெயரில் பதிவுசெய்துள்ளவர் ரோஹித் சர்மா. அதிலும் அதிரடியான ஆட்டத்திற்கு பெயர் போன அவர் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என அனைத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசைத்தியுள்ளார். அந்தவகையில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல் ஒன்றை ரோஹித் சர்மா எட்டியுள்ளார்.
அதன்படி, நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்களைச் சேர்த்துள்ளது. இப்போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 11ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
Trending
இப்போட்டியில் 14 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 131 ரன்கள் எடுத்த நிலையில் ரோஹித் சர்மா விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் இப்போட்டியில் ரோஹித் சர்மா 3 சிக்சர்களை விளாசியதன் மூலம் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை விளாசிய இரண்டாவது வீரர் எனும் சாதனையைப் படைத்தார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் 78 சிக்சர்களை அடித்து இரண்டாம் இடத்தில் இருந்தார்.
இந்நிலையில் தான் ரோஹித் சர்மா இப்போட்டியில் அடித்த 3 சிக்சர்களுடன் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 80 சிக்சர்களை விளாசி அதிக சிக்சர் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இப்பட்டியளில் இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 91 சிக்சர்களை விளாசி முதலிடத்தில் தொடர்கிறார்.
Win Big, Make Your Cricket Tales Now