
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் கடந்த 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் கேஎல் ராகுல் தலைமையில் களமிறங்கியுள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நடப்பு சீசனில் விளையாடிய முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளது.
இதையடுத்து இன்று நடைபெறும் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து லக்னோ அணி விளையாடவுள்ளது. இப்போட்டிக்காக அந்த அணி வீரர்கள் தீவிர பயிசியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நடப்பு சீசனுக்கான லக்னோ அணியில் இடம்பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லி தனிப்பட்ட காரணங்களினால் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
முன்னதாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான டேவிட் வில்லி ஐஎல்டி20 லீக் மற்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போன்ற தொடர்களில் அடுத்தடுத்து பங்கேற்று வந்ததால், குடுப்பத்தினருடன் சில காலம் இருக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது. இதன் காரணமாகவே அவர் முதல் சில் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என தகவல்கள் அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் தெரிவித்திருந்தார்.