
இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான சஞ்சய் பங்கார் கடந்த 2014 ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக இருந்துள்ளார். அந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் இறுதிப்போட்டி வரை முன்னேறியது. அதைத் தொடர்ந்து, அடுத்த இரண்டு சீசன்களில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக சஞ்சய் பங்கார் செயல்பட்டார்.
அதன்பின் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டுவந்தார். பின்னர் இந்தாண்டு அவரை ஆர்சிபி அணி பயிற்சியாளர் பதவியிலிருந்து சஞ்சய் பங்கார் நீக்கப்பட்டு, புதிய பயிற்சியாளர்களை நியமித்தது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. முன்னதாக இத்தொடரில் பங்கேற்கு வீரர்களுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. அதன் ஒருபகுதியாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் கிரிக்கெட் வளர்ச்சித் தலைவராக சஞ்சய் பங்கார் நியமிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.