ஐபிஎல் 2024: கேகேஆர் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்!
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணியின் புதிய கேப்டனாக நிதீஷ் ராணா நியமிக்கப்பட்டு அவரது தலைமையிலேயே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடியது. அதன்படி நடைபெற்று முடிந்த இந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய கொல்கத்தா அணி 6 வெற்றிகள் மற்றும் 8 தோல்விகள் என புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்து வெளியேறி இருந்தது.
முன்னதாக கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியதாலே புதிய கேப்டனாக நிதிஷ் ராணா செயல்பட்டார். பின்னர் தற்போது காயத்திலிருந்து மீண்டுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
Trending
இதன் காரணமாக தற்போது மீண்டும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான கொல்கத்தா அணிக்கு திரும்பும் அவர் மீண்டும் கேப்டனாகவும் அந்த நிர்வாகத்தின் சார்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் 12 கோடியே 25 லட்சத்திற்கு வாங்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், இயான் மோர்கனுக்கு அடுத்து கொல்கத்தா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
Quick Update #IPL2024 @VenkyMysore @ShreyasIyer15 @NitishRana_27 pic.twitter.com/JRBJ5aEHRO
— KolkataKnightRiders (@KKRiders) December 14, 2023
இந்த ஆண்டு காயத்தால் அவர் விளையாடவில்லை என்றாலும் அடுத்த ஆண்டு அவர் கேப்டனாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொல்கத்தா அணிக்கு நிதீஷ் ராணாவே இந்த ஆண்டும் தொடர்ச்சியாக கேப்டனாக இருக்கட்டும் என தற்போது அந்த அணியின் புதிய மென்டாராக நியமிக்கப்பட்டுள்ள கௌதம் கம்பீர் நிர்வாகத்தை கேட்டுக் கொண்டாலும் அணியின் நிர்வாகம் ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக அறிவித்து நிதீஷ் ராணாவை துணை கேப்டனாக அறிவித்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now