
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்து 18ஆவது சீசனுக்கான வேலைகளை ஐபிஎல் அணிகள் தற்போதில் இருந்தே தொடங்க்கியுள்ளன. ஏனெனில் எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் முழுவதுமாக கலைக்கப்பட்டு, வீரர்களுக்கான மெகா ஏலம் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த தொடரின் மீதான கூடுதல் எதிர்பார்ப்புளும் அதிகரித்துள்ளன்.
இந்நிலையில், சமீபத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கை அணியில் இருந்து நீக்குவதாக அறிவித்திருந்தது. ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான்களில் ஒருவரான ரிக்கி பாண்டிங், கடந்த 2018ஆம் ஆண்டு முதல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக அங்கும் வகித்து வந்த நிலையில் தற்போது பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இவரது பயிற்சிக்கு கீழ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது 2020ஆம் ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறியும், 2021ஆம் ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியதைத் தவிர்த்து மற்ற அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் லீக் சுற்றுடனே வெளியேறது. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு சீசன்களிலும் மோசமான ஆட்டத்தின் காரணமாக அந்த அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது. இதனால் டெல்லி அணி நிர்வாகம் இம்முடிவை எடுத்திருந்தது.