
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சிஎஸ்கேவை பேட்டிங் செய்ய அழைத்தது.
இந்நிலையில் இப்போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியில் நட்சத்திர ஆல் ரவுண்டர் காயம் காரணமாக விளையாடவில்லை என்றும், அவருக்கு பதிலாக சுர்யாஷ்ன் ஷேட்ஜ் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் விரலில் ஏற்பட்ட எழும்புமுறிவு காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து கிளென் மேக்ஸ்வெல் விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் டாஸ் நிகழ்வின் போதே மேக்ஸ்வெல்லின் காயம் குறித்து தெரிவித்ததுடன், அவருக்கான மாற்று வீரர் குறித்து இன்னும் சிந்திக்கவில்லை என்பதை தெரிவித்திருந்தார். இதன் மூலம் கிளென் மேக்ஸ்வெல்லின் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதும் உறுதியகியுள்ளது. அதேசமயம் அவரின் ஐபிஎல் பயணமும் இத்துடன் முடிவுக்கு வந்துள்ளதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.