தொடக்கங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை - ஸ்ரேயாஸ் ஐயர்!
அடுத்த ஆட்டத்திற்கு முன்பு நாங்கள் சிறந்த நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் இன்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முல்லன்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியானது ஆர்சிபி அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பிரப்ஷிம்ரன் சிங் 33 ரன்களையும், ஷஷாங்க் சிங் 31 ரன்களையும், மார்க்கோ ஜான்சென் 25 ரன்களையும் சேர்த்தனர். ஆர்சிபி தரப்பில் சுயாஷ் சர்மா மற்றும் குர்னால் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Also Read
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணியில் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் அரைசதம் கடந்ததுடன் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 73 ரன்களையும், தேவ்தத் படிக்கல் 61 ரன்களையும் சேர்த்ததன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டி பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது.
இப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், “எங்கள் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் முதல் பந்தில் இருந்தே அடிக்க வேண்டும் என்று முயற்சி செய்கின்றனர். அதனால் நாங்கள் முதலில் பேட்டிங் செய்யும்போது விக்கெட்டை மதிப்பிடுவதில் நாங்கள் சிரமப்பட்டோம். இல்லையெனில், நாங்கள் பெற்ற தொடக்கங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. அடுத்தடுத்து ஆட்டமிழந்ததன் காரணமாக ஏங்களால் நல்ல ஸ்கோரை எட்ட முடியவில்லை.
இந்த போட்டியில் எங்களுக்கு ஒரு சிறந்த தொடக்கம் கிடைத்தது, பந்து வீச்சாளர்கள் ஒரு சிறந்த வேலையைச் செய்து வருகின்றனர். ஆனால் எதிரணியில் விராட் கோலி மற்றும் மற்ற வீரர்கள் சிறப்பாக செயல்பட்டுனர். விக்கெட்டுக்கு ஏற்ப மாற்றிக் கொள்வது பற்றி நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம், பந்து பழையதாகிவிட்டால் அது விக்கெட்டை விட்டு நன்றாக சறுக்காது. பந்து வீச்சாளர்களுக்கு நல்ல ஸ்கோரைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
Also Read: Funding To Save Test Cricket
நான் ஒரு சிறந்த மனநிலையில் இருக்கிறேன், நான் முதல் 10 ரன்களைக் கடந்தவுடன் எனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்கிறேன். அதற்கான காரணங்களைக் கூற விரும்பவில்லை, முடிந்தவரை நிகழ்காலத்தில் இருக்க விரும்புகிறேன். எங்களுக்கு இப்போது ஆறு நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது, நாங்கள் மீண்டும் பயிற்சிக்குத் திரும்புவது முக்கியம். அடுத்த ஆட்டத்திற்கு முன்பு நாங்கள் சிறந்த நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now