
ஐசிசி டி20 உலகக்கோப்பை வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மெலும் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளும் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.
அந்தவகையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு இந்திய டி20 அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் இந்திய அணியில் விக்கெட் கீப்பருக்கான இடத்தை யார் பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு தான் தற்சமயம் அதிகரித்துள்ளது.
ஏனெனில் இந்த ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக், இஷான் கிஷான் போன்ற வீரர்களு அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் எம் எஸ் தோனியும் அபாரமான ஃபினிஷிங்கைக் கொடுத்து வருகிறார். இதனால் தோனிக்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என ஒருசிலர் தங்களது கருத்துகளை பதிவுசெய்து வருகின்றனர்.