விராட் கோலியை எதிர்கொள்ள முடியாமல் போனது அவமானம் - ஜேம்ஸ் ஆண்டர்சன்!
விராட் கோலி போன்ற தரமான வீரரை இத்தொடரில் எதிர்கொள்ள முடியாமல் போனது எனக்கு அவமானம் என இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. இதில் நடைபெற்று முடிந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் என வெற்றிபெற்றுள்ளன. இதன்மூலம் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7ஆம் தேதி தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி ஏற்கெனவே டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ள நிலையில் கட்சி போட்டியிலும் வெற்றிபெறும் உத்வேகத்தில் உள்ளது. அதேபோல் இங்கிலாந்து அணியும் தொடரை ஆறுதல் வெற்றியைத் தேட போராடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
Trending
முன்னதாக தனிப்பட்ட காரணங்களால் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இத்தொடரிலிருந்து விலகினார். இதனால் விராட் கோலியின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில், விராட் கோலி இத்தொடரில் விளையாடாததற்கு இங்கிலாந்து ரசிகர்கள் நன்றி தெரிவிப்பார்கள் என்று அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “நீங்கள் எப்போதும் சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாட விரும்புகிறீர்கள். மேலும் விராட் கோலி இத்தொடரின் ஒரு பகுதியாக இல்லை என்பது அவமானம். பல ஆண்டுகளாக நாங்கள் சில பெரிய போர்களை சந்தித்துள்ளோம். ஆனால் எனக்கு மட்டுமல்ல, ஒரு அணியாக நீங்கள் உலகின் சிறந்த அணிக்கு எதிராக விளையாட விரும்புகிறீர்கள் என்று நான் நினைக்கிறேன்.
விராட் கோலி இந்த தொடரில் விளையாடாமல் சென்றதற்கு இங்கிலாந்து ரசிகர்கள் நன்றி தெரிவிப்பார்கள் என்று கணிக்கிறேன். ஏனெனில் அவர் அந்தளவுக்கு தரமான ஒரு வீரர். ஆனால் எங்களுடைய கண்ணோட்டத்தில் நீங்கள் எப்போதும் சிறந்தவர்களுக்கு எதிராக உங்களுடைய திறமையை சோதிக்க விரும்புவீர்கள். அந்த வகையில் பல ஆண்டுகளாக அவருக்கு எதிராக பந்து வீசுவது எனக்கு கடினமாக இருந்தது. அப்படிப்பட்ட அவரை இத்தொடரில் எதிர்கொள்ள முடியாமல் போனது அவமானம்" என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now