ராகுல் vs பந்த்: பிளேயிங் லெவனில் யாருக்கு இடம்? - ரோஹித் சர்மாவின் பதில்!
ஒவ்வொரு முறையும் அணியின் பிளேயிங் லெவனில் இதுபோன்ற சிக்கல்கள் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணியானது 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றிய நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றன.
அதேசமயம் நாளைய போட்டிக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ஏனெனில் ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்களுடன் ஷிவம் தூபே, ரியான் பாராக் மற்றும் ஹர்ஷித் ரானா போன்ற அறிமுக வீரர்களும் இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளதன் காரணமாக யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்து வருகிறது.
Trending
அதிலும் குறிப்பாக அணியின் விக்கெட் கீப்பருக்கான தேர்வில் கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் இருப்பதால் இவர்களில் யார் இடம்பிடிப்பார்கள் என்ற கேள்வி அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவிடம், நாளைய போட்டிக்கான் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் யார் இடம்பிடிப்பார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ரோஹித் சர்மா, “இது ஒரு கடினமான முடிவு. ஏனெனில் இருவரும் தரமான வீரர்கள். இரண்டு வீரர்களின் திறமையும் உங்களுக்குத் தெரியும். அப்படி ஒரு தரம் இருக்கும் போது அணியைத் தேர்ந்தெடுப்பது அல்லது வீரரைத் தேர்ந்தெடுப்பது எளிதல்ல. மேலும் அவர் இருவருமே எங்கள் அணியின் மேட்ச் வின்னர்களாக அறியப்பட்டவர்கள். கடந்த காலங்களில் அவர்கள் எங்களுக்கான நிறைய போட்டிகளில் வெற்றியைப் பெற்றுத்தந்துள்ளனர்.
ஒவ்வொரு முறையும் அணியின் பிளேயிங் லெவனில் இதுபோன்ற சிக்கல்கள் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது. யாரைத் தேர்ந்தெடுப்பது, யாரைத் தேர்வு செய்யக்கூடாது என்று நீங்கள் அதிகம் விவாதிக்கும்போது, அணியில் இடம்பிடித்த அனைவருக்கும் ஒரு தரம் இருக்கிறது என்று அர்த்தம். இப்படிப்பட்ட பிரச்சனைகள் வருவதே நல்ல விஷயம் என்று நினைக்கிறேன். நான் கேப்டனாக இருக்கும் வரை இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்நோக்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
Win Big, Make Your Cricket Tales Now