
வங்கதேச அணி சமீபத்தில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடர் முடிவில் வங்கதேச அணியானது இரண்டு போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியதுடன், தொடரை முழுமையாக கைப்பற்றியும் சாதனைகளை குவித்துள்ளது.
அதேசமயம் பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகள் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏனேனில் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் ஒரு அவமானகரமான தோல்வியை 2-0 என்ற கணக்கில் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதன் காரணமாக அந்த அணியின் கேப்டன், தேர்வுகு குழு, நட்சத்திர வீரர்கள் என அனைவர் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இத்தோல்வியின் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமானது சில மாற்றங்களை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் அணியின் கேப்டன்களை மாற்றும் முயற்சியில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இறங்கியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் பாகிஸ்தானின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டன் பதிவியில் இருந்து விலகுவதாக நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் இன்று அறிவித்துள்ளார். முன்னதாக, கடந்தாண்டு நடந்து முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியானது லீக் சுற்றுடனே வெளியேறி ஏமாற்றமளித்தது. இத்தோல்விக்கு பொறுபேற்கும் வகையில் அணியை கேப்டனாக வழிநடத்திய பாபர் ஆசாம் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலுகுவதாக அறிவித்தார்.