Babar azam captaincy
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து மீண்டும் விலகினார் பாபர் ஆசாம்!
வங்கதேச அணி சமீபத்தில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடர் முடிவில் வங்கதேச அணியானது இரண்டு போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியதுடன், தொடரை முழுமையாக கைப்பற்றியும் சாதனைகளை குவித்துள்ளது.
அதேசமயம் பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகள் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏனேனில் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் ஒரு அவமானகரமான தோல்வியை 2-0 என்ற கணக்கில் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதன் காரணமாக அந்த அணியின் கேப்டன், தேர்வுகு குழு, நட்சத்திர வீரர்கள் என அனைவர் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இத்தோல்வியின் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமானது சில மாற்றங்களை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Cricket News on Babar azam captaincy
-
எனது கேப்டன்சி குறித்த முடிவை பிசிபி தான் எடுக்கும் - பாபர் ஆசாம்!
கேப்டன் பதவியில் இருந்து விலக நேரிட்டால் அதை வெளிப்படையாக அறிவிப்பேன். எதற்கும் பின்னால் ஒளிந்து கொள்ள மாட்டேன் என பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக புதிய சாதனை படைத்த பாபர் ஆசாம்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக வெற்றிகளைப் பதிவுசெய்த வீரர்கள் வரிசையில் பாகிஸ்தானின் பாபர் ஆசாம் முதலிடம் பிடித்துள்ளார். ...
-
தேர்வு குழுவின் முடிவு என ஆச்சரியமாக உள்ளது - ஷாஹித் அஃப்ரிடி!
பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக பாபர் ஆசாமை மீண்டும் நியமித்துள்ள தேர்வு குழுவின் முடிவு தனக்கு ஆச்சரியமளிப்பதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் அணியின் கேப்டனாக மீண்டும் பாபர் ஆசாம் நியமனம்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் மாதம் நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக பாபர் ஆசாம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
பாகிஸ்தான் டி20 & டெஸ்ட் அணியின் கேப்டன்களாக அஃப்ரிடி, மசூத் நியமனம்!
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து பாபர் ஆசாம் விலகியதையடுத்து, ஷாஹின் அஃப்ரிடி டி20 அணிக்கும், ஷான் மசூத் டெஸ்ட் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். ...
-
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய பாபர் ஆசாம்!
தற்போது 3 வகையான கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். எனக்கு கடினமான முடிவு என்றாலும், இதற்கு சரியான நேரம் இதுதான் என்று நினைக்கிறேன் என பாபர் ஆசாம் கூறியுள்ளார். ...
-
கேப்டன் பொறுப்பு எனது பேட்டிங்கை பாதிக்கவில்லை - பாபர் ஆசாம்!
இங்கிலாந்துடனான டெஸ்ட் தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம், கேப்டன் பொறுப்பினால் எனது பேட்டிங் பாதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24