Advertisement

பேட்டிங்கில் நாங்கள் அசத்தவில்லை - ரோஹித் சர்மா அதிருப்தி!

எங்களுடைய பவுலிங் நல்ல சமநிலையுடன் இருக்கிறது. இருப்பினும் பேட்ஸ்மேன்கள் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

Advertisement
பேட்டிங்கில் நாங்கள் அசத்தவில்லை - ரோஹித் சர்மா அதிருப்தி!
பேட்டிங்கில் நாங்கள் அசத்தவில்லை - ரோஹித் சர்மா அதிருப்தி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 29, 2023 • 10:43 PM

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இன்று இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி நேராக அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக மாறி இருக்கிறது. அதே சமயத்தில் நடப்பு உலகக் கோப்பையில் அரையிறுதி வாய்ப்பு இழந்து வெளியேறும் முதல் அணியாக இங்கிலாந்து மாறியிருக்கிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 29, 2023 • 10:43 PM

இப்போட்டியில்டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 101 பந்துகளில் 87 ரன்கள் கொண்டு வந்தார். இவருக்கு அடுத்து சூர்யகுமார் யாதவ் இறுதிக் கட்டத்தில் 49 ரன்கள் எடுத்தார். இந்திய அணி ஒன்பது விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் சேர்த்தது. இதற்கு அடுத்து இலக்கை நோக்கி களம் வந்த இங்கிலாந்து அணியை இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் அதிரடியாக முடக்கிப் போட்டார்கள். 129 ரன்களுக்கு இங்கிலாந்து அணி சுரண்டது. சமி நான்கு விக்கெட் பும்ரா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

Trending

இந்நிலையில்ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசும்பொழுது , “இந்த போட்டியில் எங்களுடைய அணி தங்களுடைய கேரக்டரை காட்டினர். சரியான நேரத்தில் எங்களுடைய அனுபவமிக்க வீரர்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெற வைத்தனர். இப்போட்டியில் பேட்டிங் செய்த போது இங்கிலாந்து சவாலை கொடுத்தனர். குறிப்பாக இந்த பிட்ச்சில் நாங்கள் குறிப்பிட்ட ஸ்கோரை அடிக்க விரும்பினோம். ஆனாலும் பேட்டிங்கில் நாங்கள் அசத்தவில்லை. 

ஆரம்பத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது சரியல்ல. நான் உட்பட சிலர் தங்களுடைய விக்கெட்டை பரிசளித்தோம். அதனால் நாங்கள் 30 ரன்கள் குறைவாக அடித்தோம். அந்த சூழ்நிலையில் பந்து வீச்சில் ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை எடுப்பது அவசியம். அதை அறிந்த எங்களுடைய பவுலர்கள் மைதானத்தில் இருந்த சூழ்நிலைகளை சிறப்பாக பயன்படுத்தி நல்ல லென்த்தில் வீசினார்கள். அந்த வகையில் எங்களுடைய பவுலிங் நல்ல சமநிலையுடன் இருக்கிறது. இருப்பினும் பேட்ஸ்மேன்கள் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement