
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது.இந்த தொடருக்கு தயாராகும் விதமாக உலகின் பல்வேறு அணிகளும் தங்களுடைய இறுதி கட்ட பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வரும் உலக கோப்பையில் கவனத்தை ஈர்க்கக்கூடிய ஐந்து வீரர்கள் குறித்து தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் ஜாம்பவான் ஜாக் காலிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
அவரது இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கக் கூடியவர் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரஷித் கான். இந்தியாவில் தற்போது உலகக்கோப்பை போட்டி நடைபெற இருப்பதால் ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதனால் ரஷீத் கான் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பேட்டிங்களும் அதிரடியாக விளையாடக் கூடியவர் ரஷீத் கான் என்பதால் அவர் மீது தனி கவனம் இருக்கிறது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கக் கூடியவர். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. உலக கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டும் என்றால் விராட் கோலி அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.