இங்கிலாந்து வெற்றி பெற்று உலகக் கோப்பையை கைப்பற்றும் - ஜேம்ஸ் ஆண்டர்சன் கணிப்பு!
இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை எந்த அணி வெல்லும்? என்கின்ற தன்னுடைய கணிப்பை இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சிப் போட்டிகள் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. நாளை ஓய்வு நாளாக அமைந்து, நாளை மறுநாள் அக்டோபர் ஐந்தாம் தேதி, நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து மற்றும் கடந்த உலக கோப்பை இறுதி போட்டியில் தோல்வி கண்ட நியூசிலாந்து, இரண்டு அணிகளும் முதல் போட்டியில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் மோதிக்கொள்ள இருக்கின்றன.
உலகக்கோப்பை மிக நெருக்கத்தில் இருக்கின்ற காரணத்தினால் ரசிகர்கள், முன்னாள் இந்நாள் வீரர்கள் என அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் உற்சாகத்துடனும் இருக்கிறார்கள். நடந்து முடியும் உலகக் கோப்பை எண்ணற்ற சிறப்பான சம்பவங்களையும், பரபரப்பான நிகழ்வுகளையும் கொண்டுதான் அமையும். உலகக் கோப்பைக்கு முன்பு எண்ணற்ற கணிப்புகள் இருந்தாலும், அவையெல்லாம் உலகக் கோப்பையில் கொஞ்சம் மாறி வருவதுதான் விளையாட்டின் சிறப்பு.
Trending
அந்த வகையில், இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை எந்த அணி வெல்லும்? என்கின்ற தன்னுடைய கணிப்பை இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “அரையிறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகள் வரும் என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா மிகச் சிறப்பாக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் திரும்பி வந்தது. அவர்களுக்கு பேட்டிங் நன்றாக உள்ளது மேலும் பந்துவீச்சிலும் வலிமை உள்ளது.
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு மிக நெருக்கமாக இருக்கும் ஆனாலும் தவறவிடுவார்கள். இறுதிப் போட்டிக்கு இந்தியா, இங்கிலாந்து அணிகள் வரும். மிக நெருக்கமாக அமையும் அந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று உலகக் கோப்பையை கைப்பற்றும்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now