
இஷாந்த் சர்மாவின் சாதனையை சமன்செய்த ஜஸ்பிரித் பும்ரா (Image Source: Google)
India vs England 4th Test: மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா ஒரு விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. அதன்பின் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி ஜோ ரூட்டின் அபாரமான சதத்தின் மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 544 ரன்களைக் குவித்துள்ளது.